என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விவசாய நிலங்கள்
நீங்கள் தேடியது "விவசாய நிலங்கள்"
தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Agriculturallands #Tasmac
சென்னை:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லசாமி நாச்சிமுத்து. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில், மயிலம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றும்படி மாவட்ட கலெக்டருக்கு கடந்த ஜனவரி 21-ந்தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த டாஸ்மாக் கடை உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுகிறது. இந்த இடம் வழியாக செல்லும் சாலையைதான் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளனர். விவசாய நிலத்தில் உள்ள இந்த டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், ‘மனுதாரர் குற்றம் சாட்டும் டாஸ்மாக் மதுபானக்கடையை விவசாய நிலத்தில் இருந்து உடனடியாக அகற்றி, அது குறித்த அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அதேநேரம், தமிழகம் முழுவதும் எத்தனை டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள் விவசாய நிலங்களில் உள்ளது? என்ற விரிவான அறிக்கையையும் வருகிற 20-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டனர். #Agriculturallands #Tasmac

சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலைக்காக அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. #GreenWayRoad
சென்னை:
சென்னையில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக இந்த பாதை உருவாக உள்ளது. மொத்தம் 14 தாலுக்காக்களில் உள்ள 159 கிராமங்களை தொட்டுக் கொண்டு இந்த 8 வழி பசுமை சாலை கடந்து செல்லும்.
இந்த சாலை காரணமாக சென்னை-சேலம் இடையே போக்குவரத்து நேரம் பாதியாக குறையும். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியும்.
இதன் காரணமாக எரிபொருள் சிக்கனம், நேர சிக்கனம் உள்பட பல்வேறு பயன்கள் கிடைக்கும். குறிப்பாக சரக்கு போக்குவரத்துக்கு இந்த சாலை மிகவும் கைகொடுக்கும் என்று மத்திய- மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த 8 வழி பசுமை சாலைக்கான நிலம் ஏற்கனவே கணிக்கப்பட்டு விட்டது. 5 மாவட்டங்களிலும் எந்தெந்த பகுதி வழியாக இந்த சாலை செல்லும் என்பது ஏற்கனவே அறிவிக்கைகள் மூலம் கூறப்பட்டு விட்டது.
தேசிய நெடுஞ்சாலை 179-ஏ, 179-பி என்று இந்த சாலைக்கு பெயரிடப்பட உள்ளது. இந்த சாலைக்கு 5 மாவட்டங்களில் இருந்தும் அரசு நிலங்களும், தனியார் நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.
அதிகபட்சமாக திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இரு மாவட்டங்களில் இருந்தும் வனத்துறைக்கு சொந்தமான 9 இடங்களில் இருந்து நிலங்கள் எடுக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 74 கிராமங்களை ஊடுருவியபடி இந்த சாலை அமைய உள்ளது. இதனால் 74 கிராம மக்களும் கணிசமான நிலத்தை இழக்கக்கூடும்.
மத்திய-மாநில அரசுகளின் அறிவிக்கையின் படி இந்த திட்டத்துக்கு அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி விட்டன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு, செங்கம், வந்தவாசி, செய்யாறு, போளூர் பகுதிகளில் இருந்து அதிகப்படியான புறம்போக்கு நிலங்கள் பயன்படுத்தப்படும்.
8 வழி சாலை திட்டத்துக்கு அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர தனியார் நிலங்களும் அதிக அளவில் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக விவசாய நிலங்கள் சில ஆயிரம் ஏக்கர்கள் பறிபோக உள்ளன. மொத்தம் 7 ஆயிரத்து 237 பேருக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். இதில் சுமார் 6 ஆயிரம் பேர் முழுக்க முழுக்க அந்த விவசாய நிலங்களையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் இந்த பாதிப்பை ஏற்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பதில் இந்த சாலை வழியாக தொழில்கள் மேம்படும் என்று சொல்கிறார்கள். குறிப்பாக அலுமினியம், சிலிக்கான், கண்ணாடி, செராமிக், சிமெண்டு தொழில்கள் வளர்ச்சி பெறும் என்று கணக்கிட்டுள்ளனர்.
தொழில் வளர்ச்சிக்காக விவசாய நிலங்களை இழக்கும் மக்களுக்கு இழப்பீட்டு தொகையை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்து கொடுக்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரு.3 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலத்தை பறிகொடுக்கும் உரிமையாளர்கள் அதற்கான சட்டப்பிரிவு 3சி(1) பிரிவின் கீழ் இழப்பு தொகையை பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை வெளியிட்ட 21 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அதிகாரி (நிலம் கையகப்படுத்துதல்), தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் விண்ணப்பித்து தங்களது ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு விவசாயிகளின் நிலத்திற்கு ஏற்க இழப்பீடு தொகை 2 மடங்கு அதிகமாக கொடுப்பதா? அல்லது 3 மடங்கு அதிகமாக கொடுப்பதா? என்பது பற்றி அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
ஆனால் நிலத்தை இழக்கும் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் இழப்பீடு தொகை பெற விரும்பவில்லை. தங்களது நிலத்தையும் விட்டுக் கொடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. வாழ்வாதார பூமியாக இருப்பதால் மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
ஆனால் சென்னை- சேலம் இடையே செயற்கை கோள் மூலம் 8 வழி பசுமை சாலைக்கான இடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதால் இந்த வழித்தடத்தை மாற்ற இயலாது என்று அரசு கூறியுள்ளது. #GreenWayRoad
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #Sterlite #TNMinister #KadamburRaju
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலில் மீன்பிடிக்க செல்ல 15 அடி நீளமும், 150 எச்.பி. திறனும் கொண்ட விசைப்படகுகள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 24 அடி நீளமும், 240 எச்.பி. திறனும் கொண்ட பெரிய விசைப்படகுகளில் சென்று கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீன வர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்தகைய பெரிய விசைப்படகுகளையும் கடலில் மீன்பிடிக்க அனுமதித்து உடனே அரசாணை பிறப்பித்தார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்படி சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தாரோ, அதேபோன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரும் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. அது மக்களின் உணர்வு பிரச்சினை.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 99 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை. 43 நாட்கள் முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்து, அதனை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு, 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #Sterlite #TNMinister #KadamburRaju

×

X